தமிழகத்தில் நடைபெறவுள்ள ராணுவ கண்காட்சியை துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஏப்.,11ம் தேதி தமிழகம் வருகிறார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் தமிழகத்தில் ஏப்., 11 முதல் 14 வரை நான்கு நாட்கள் ராணுவ கண்காட்சி நடைபெறுகிறது. கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள திருவிடந்தையில் நடைபெறும் இக்கண்காட்சியை ஏப்.,11ல் பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.