பாவூர்சத்திரம் நவநீதகிருஷ்ணபுரத்தில் இன்று அதிகாலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து நெல்லைக்கு கெமிக்கல் கலவை ஏற்றி வந்து கொண்டிருந் லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வேப்ப மரத்தில் மோதியதில் இரண்டு மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் லாரியின் முன்பக்கம் பலத்த சேதமடைந்து. லாரியை ஒட்டி வந்த தேனிமாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 29) அதிஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து நடந்த இடத்தின் அருகில் வீடுகள் இருந்தாலும் அதிகாலை நேரம் என்பதால் விபத்து ஏதும் எற்ப்படவில்லை ,ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் லாரியை இயக்கியதால் விபத்து நடந்தது என கூறப்படுகிறது. சம்பவம் அறிந்தவுடன் பாவூர்சத்திரம் காவல்துறை மெயின் ரோட்டில் போக்குவரத்துத்துக்கு இடையூராக இருந்த மரக் கிளைகளை அப்புறப்படுத்த சரி செய்தனர் பெரும்பாலான சாலை விபத்துகள் பெரும்பாலும் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடக்கிறது. இந்த சமயத்தில் டிரைவர்கள் தூக்க கலக்கத்தில் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகள் நடப்பதால் பல மாவட்டங்களில் நள்ளிரவு ,மற்றும் அதிகாலை பஸ், கார், லாரி, கனரக லாரி உள்ளிட்டவை நிறுத்தி அதன் டிரைவர்களுக்கு சூடாக டீ மற்றும் பிஸ்கட் வழங்கி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிவருகின்றனார் இதை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைபகுதிகளில் இந்த முறையை நெல்லை மாவட்ட காவல் துறை செயல் படுத்தலாமே
பாவூர்சத்திரம் அருகே லாரி மோதி விபத்து அசம்பாவிதம் தவிர்ப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari