சென்னை விருகம்பாக்கம் ஐ.ஓ.பி., வங்கியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கியக் கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னை விருகம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் லாக்கரை, கேஸ் வெல்டரிங் மூலம் உடைத்து, அதில் இருந்து106 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து, கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. இந்தக் குழுவினர் பீகார் மாநிலம் மற்றும் நேபாளத்தில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேபாளத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் சபிலால் என்பவனை போலீசார் கைது செய்தனர். நேபாளத்தில் பதுங்கி இருந்த சபிலாலை, சர்வதேச போலீசார் இண்டர்போல் உதவியுடன் கைது செய்தனர்.
முன்னதாக இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளி சபிலால் இன்று கைது செய்யப்பட்டுள்ளான்.