சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்திய 4 பெண்கள் உள்பட 15 இளைஞர்கள் கைது செய்யப் பட்டனர்.
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய 4 பெண்கள் உள்பட 15 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். காவிரி உரிமைக்காகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை மெரினாவில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 15 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, மெரினாவில் காவிரிக்காக போராடியவர்கள் யார்? என்பது குறித்த போட்டோக்களை வைத்து உளவுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பேஸ்புக்கில் தங்கள் படங்களை பதிவு செய்து, இணைந்து மெரினாவில் போராட்டம் நடத்திய மக்களை போலீசார் தேடினர்.
மெரினாவில் 30க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் போராட்டம் நடத்திய புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து அவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையை துவக்கி, அவர்களை போலீசார் கைது செய்தனர்.