கரூரில் நேற்று திமுக.,வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது திமுக பெண் நிர்வாகியின் இடுப்பைக் கிள்ளியதாக இளைஞர் அணி நிர்வாகி மீது அந்தப் பெண் புகார் கூறி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்த செய்திகள் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் கேலிப் பொருளாக மாறியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக., நடத்திய கிளுகிளுப்பு போராட்டம் இதுதான் என்று மீம்ஸ்கள் தூள் பறந்தன.
நேற்று நடந்த திமுக கிளு கிளுப்பு போராட்டம், அக்காவின் இடுப்பை கிள்ளியவன் எவண்டா 😜 – என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், இன்று டிவிட்டரில் டாப் 1 – ட்ரெண்டராக மாறியது #இடுப்புகிள்ளிதிமுக என்ற ஹேஸ்டாக். இந்த ஹேஷ்டாக்கில் பலரும் கேலியாக வடிவேலு காமெடியை போட்டு வந்தார்கள்.
ஒருபுறம் கரூரில் கடையடைக்க வலியுறுத்தி திமுக.,வினர் வன்முறையில் ஈடுபட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தக் கிளுகிளு போராட்ட வீடியோவும் வைரலானது.