புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கருரில் காவிரி மேலாண்மைவாரியம் அமைக்ககோரி கலாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். சமுக ஆர்வலர் முகமது குஞ்சாலி,மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கலாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் பேசினர் அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நிர்வாகிகள் இணைசெயலாளர் செந்தில்குமார்,பொருளாளர் அன்புக்கரசு ராமன்,அருள்பாண்டி,பிரசாத்,ஜெகன்,அப்துல்ஹமீது,செந்தில்குமார்,லட்சுமணன்,மகாலிங்கம்,அஸ்பாக்,சதாம் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.