கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்தும் வேளையில், குற்றாலம் கோடையின் சொர்க்கமாகவே திகழ்கிறது பழைய குற்றால
அருவியில் மிதமான நீர் வரத்து இருப்பதால் சூட்டை தணிக்க பழைய
குற்றாலத்திற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டரித்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் காலையில் இருந்து மாலை வரை மக்கள் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து முழுவதும் நின்ற நிலையில் பழைய குற்றால அருவியில் மட்டும் மிதமான நீர்வரத்து உள்ளது.
இதனால் தமிழகத்தின் பல இடங்களில் வெயிலில் தாக்கத்தால் மக்கள் பழைய குற்றாலத்திற்கு படையெடுத்து வருகின்றனர் மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகாரித்துள்ளது. குறைவாக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்