- Ads -
Home உள்ளூர் செய்திகள் சமூக விரோதிகளை களை எடுக்கவே துணை ராணுவம்?: பதறும் திருமுருகன் காந்தி

சமூக விரோதிகளை களை எடுக்கவே துணை ராணுவம்?: பதறும் திருமுருகன் காந்தி

அண்மைக் காலமாக காவிரி பாசனப் பகுதிகளில், விவசாயிகள் என்னும் போர்வையிலும், விவசாயிகளுக்கு ஆதரவானவர்கள் என்னும் முகமூடியிலும் சமூக விரோத தேச விரோத சக்திகள் பின்னிருந்து இயங்குவதும், தேசப் பிரிவினைக் கருத்துக்களை மக்களிடையே பரப்பி மக்களை அச்சத்திலும் அமைதியின்மையிலும் ஆக்கி போராட்டத்தைத் தூண்டி வருவதும் சமூக ஆர்வலர்களுக்கு பெரும் கவலையைத் தந்துள்ளது.

நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்துவது ஒருவரின் தனிநபர் உரிமை என்றாலும், ஒருவரைத் தூண்டிவிட்டு, தங்கள் சுயநலனில் தேசப்பிரிவினை எண்ணங்களை பிரசாரம் செய்வது, தேசத் துரோகச் செயல்கள் மட்டுமல்ல, அப்பாவிகளை பலிகடாவாக்கும் அற்பத்தனமான செயல்களும் கூட! இந்தச் சூழ்நிலை தமிழகத்தில், குறிப்பாக காவிரி பாசன பகுதிகளில் பரவலாக மேற்கொள்ளப் பட்டுவருவதை தமிழக உளவுத் துறை மட்டுமல்லாது மத்திய உளவுத் துறையும் அரசுக்கு அறிக்கை அனுப்பி தெளிவித்துள்ளது.

ALSO READ:  திருமண விழாவில் ரூ.1.71 லட்சம் மொய் பணம் திருடிய பெண்கள் கைது!

தற்போது தொடர் போராட்டங்களால் காவிரி பாசன பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தி வரும் நபர்கள் குறித்து கண்காணித்து, பொது அமைதியை சீர் செய்திட பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக துணை ராணுவப் படையினர் கும்பகோணம் உள்ளிட்ட காவிரி பாசன பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது வழக்கமான பாதுகாப்பு பயிற்சி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினாலும், மக்களின் அச்சத்தைப் போக்கவே இந்த ரோந்து நடவடிக்கை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,  மே 17 எனும் இயக்கத்தை நடத்தி வரும் திருமுருகன் காந்தி, டெல்டா மாவட்டங்களில் தமிழின உரிமையை அழிக்கவே துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார்.

தஞ்சை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும் அரசியல் கட்சியினர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து மீத்தேன் எடுத்து வரும் நிலையில்,  மீத்தேனுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்த அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தயாராகி வந்த நிலையில் திடீரென நேற்று மத்திய அதிரடி படையினர் டெல்டா மாவட்டங்களில் குவிக்கப்பட்டனர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா!

இதுகுறித்துப் பேசிய மே 14 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ”தமிழின அழிப்பிற்கான முதல் அறிகுறியாக காவிரி டெல்டாவில் துணை ராணுவம் இறக்கப்பட்டிருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

ரம்யா ஸ்ரீ

3 COMMENTS

  1. இந்தப் பொறுக்கிப்பசங்களைப் பூண்டோடு களை எடுக்க வேண்டும். தேசத்துரோகிகளை அடியோடு ஒழிப்போம்.

  2. சென்ட்ரல் போலீசா பார்த்தா திருட்டு பயலுகா தான் பயப்படனும்
    திருமுருகன்காந்தி ஏன் பயப்படனும் டூமில் போராளிகளுக்கு ஆப்பு ரெடி….

  3. இது போன்ற விஷஜந்துக்களை தயவு தாட்சம் பாராமல் ஒடுக்க வேண்டும் அல்லது என்கௌண்டரில் ஒழிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version