நடிகர் ரஜினி காந்த் ஆச்சிய பிடிக்க முடியாது, ஆட்சியப் பிடிக்க போறாரான்னு கேட்டாலும் கேட்டார் செல்லூர் ராஜூ, இப்போது கடும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். செட்டிநாட்டு ஆச்சியை இழிவு படுத்துவதாக அவரது கருத்து அமைந்துவிட்டதாக, நகரத்தார் சமூகம் அவருக்கு எதிராகக் கொதித்து எழுந்திருக்கிறது.
இந்நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த பாஜக., தேசிய செயலர் ஹெச். ராஜா, தன் பங்குக்கு செல்லூர் ராஜுவை வறுத்து எடுத்திருக்கிறார். இது நகரத்தார் சமூகத்தை மட்டும் இழிவு படுத்துவதல்ல, ஒட்டு மொத்த இந்து சமூகத்தையே இழிவு படுத்துவது என்று கோபத்தில் ஒரு டிவிட்டர் பதிவை இட்டிருக்கிறார்.
அதில், அமைதியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இறைபணி மற்றும் கல்விப்பணி ஆற்றிவரும் நகரத்தார் சமுதாய பெண்களை (மரியாதைக்குரிய ஆச்சிகளை) இழிவாக பேசிய செல்லூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எச். ராஜா வலியுறுத்தி உள்ளார். மேலும், நகரத்தார் சமுதாயம் தனியாக இல்லை. ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் முக்கிய அங்கமாவார்கள் என்று கூறியிருக்கிறார்.
அவரது டிவிட்டர் பதிவு:
அமைதியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இறைபணி மற்றும் கல்விப்பணி ஆற்றிவரும் நகரத்தார் சமுதாய பெண்களை ( மரியாதைக்குரிய ஆச்சிகளை) இழிவாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். நகரத்தார் சமுதாயம் தனியாக இல்லை. ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் முக்கிய அங்கமாவார்கள். pic.twitter.com/MJ2NbbGbMB
— H Raja (@HRajaBJP) May 11, 2018