தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப் புகைகுண்டுகளை போலீஸர் வீசினர். இதனிடையே போலீஸாரின் வாகனம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இந்த வன்முறையின் போது, ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அழைத்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். மேலும், தூத்துக்குடியில் இயல்பு நிலையை திரும்ப கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடத்தப் பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே நிலைமை கட்டுக்குள் இருப்பதாக டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என டிஜிபி டி.கே ராஜேந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.
போலீசார் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 5 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டது என தகவல் தெரிவித்தனர். போலீஸார்.