தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப் பட்டுள்ளது.
தூத்துக்குடியில் வரும் 25ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்த ஆறுமுகமங்கலம், வேடநத்தம், ஒட்டப்பிடாரம், எப்போதும் வென்றான் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.