சென்னை: அடுத்த 2 நாட்களில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை, தென் தமிழகப் பகுதிகளில் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரியில் 10 செ.மீ., உதகையில் 9 செ.மீ., ஈரோடு மாவட்டம் பெருந்துறை, தாளவாடியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.