சென்னை: ஸ்டெர்லைட் துப்பாகிச்சூடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட இருக்கிறது. தூத்துக்குடி எம்எல்ஏ சண்முகநாதன், தமிமுன் அன்சாரி, தினகரன் ஆகிய மூவரில் ஒருவர் தீர்மானம் கொண்டு வருகின்றனர்.
அவசர கவன தீர்மானமாக ஸ்டெர்லைட் விவகாரம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், தமிழக சட்டப் பேரவைக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் தூத்துக்குடி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் கருப்புச்சட்டை அணிந்து வந்துள்ளனர். தூத்துக்குடி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் கருப்புச்சட்டை அணிந்து வந்துள்ளதாகக் கூறப்பட்டது.
இதனிடையே இன்று முதல் நிகழ்ச்சியாக, முன்னாள் எம்.எல்.ஏக்கள் 7 பேர் மறைவுக்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப் படுகிறது.
செ.மாதவன், முத்தையா, கணேசன், ஆர்.சாமி, பூபதி, மாரியப்பன் உள்பட 7 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப் படுகிறது.