நெல்லையின் புதிய ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ், குற்றாலத்தில் ஆய்வு நடத்தி, குற்றாலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது,.
குற்றால சீஸன் துவங்கியுள்ள நிலையில், கார் பார்க்கிங் இடங்களில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பு, ஐந்தருவியிலுள்ள வாகனங்கள் கட்டணம் வசூலிக்கும் இடத்தை அருவிக்கு செல்லும் பகுதியில் அமைக்கவும், தங்கும் விடுதிகளில் ஆய்வுகள் நடத்தி, சுற்றுலா பயணிகள் பொழுது போக்குவதற்கு உள்ள பகுதிகளை பார்வையிட்டு நடவடிக்கைகள் எடுக்கவும் வேண்டும் என்பது குற்றாலம் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இதனை ஆட்சியர் கவனத்தில் கொண்டு, உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பகுதியினர்.