Homeஉள்ளூர் செய்திகள்நீட் தேர்வில் தோல்வி என தொடரும் சோகம்! திருச்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நீட் தேர்வில் தோல்வி என தொடரும் சோகம்! திருச்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

subashree neet1 - Dhinasari Tamil

திருச்சி: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததைத் தாங்க இயலாமல் திருச்சி சமயபுரம் அருகே சுபஸ்ரீ என்ற மாணவி புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வு முடிவுகள், கடந்த செவ்வாய்க் கிழமை அன்று வெளியாயின. தமிழகத்தில் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து பத்தாயிரம் பேரில் சுமார் 40 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நீட் தேர்வுக்காக தமிழக அரசும் பெரு முயற்சி எடுத்து இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனால் தேர்ச்சி விகிதம் தமிழகத்தில் கூடியுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததைத் தாங்க இயலாமல், செஞ்சியைச் சேர்ந்த மாணவி பிரதீபா, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருச்சி அருகே ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், இந்தத் தற்கொலை விவகாரம் குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

subashree neet - Dhinasari Tamil
சுபஸ்ரீ தன் பெற்றோருடன்…

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் சுபஸ்ரீ. இவர், திருச்சி சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள். கண்ணன், திருச்சி கண்டோன்மெண்ட் கிளை அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநராகவும், அண்ணா தொழிற்சங்க தலைவராகவும் உள்ளார். சுபஸ்ரீ இந்த வருடம் 12ஆம் வகுப்பில் 907 மதிப்பெண்கள் எடுத்து திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், நீட் தேர்வு முடிவுகள் வெளியான போது, அவரால் 24 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்துள்ளது. இந்தத் தோல்வியைத் தாங்க இயலாமல் மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார் சுபஸ்ரீ. இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் இருந்த மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனது மகளின் மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கண்ணண், “நீட் தேர்வை முற்றிலும் நீக்க வேண்டும். இனி நீட் தேர்வினால் ஒரு மாணவ மாணவியைக் கூட நாம் இழக்கக் கூடாது. தோல்வி அடைந்தால், தற்கொலை ஒரு தீர்வாகாது” என்று கூறினார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,139FansLike
376FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,860FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

3 COMMENTS

  1. THEIR MIND SET UP IS TO GET EVERYTHING EASY AND FREE. WHAT ONE CAN EXPECT FROM SUCH GIRLS WHO HAVE NO BASIC COURAGE AND DETERMINATION TO SERVE THE SOCIETY. COWARDS. OFCOURSE THERE ARE POLITICAL LEADERS TO INFLATE THE ISSUE.

  2. சுனாமியாலும் வெள்ளத்தாலும் வார்தா புயலாலும் ஆயிரக் கணக்கான மக்கள் மடிந்தனர். ஆனால் திறமை குறைவால் நீட் தேர்வில் தோல்வியடைந்த பெண் உயிருடன் இருந்து தன் திறமையை மேலும் வளர்த்து அடுத்த தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கள் குடும்பங்கள் மட்டுமே பல வழிகளில் திறமை அடைய வேண்டும் என்று நீட் தேர்வை எதிர்க்கும் கும்பலின் சதிக்கு ஆளாகியிருக்கக் கூடாது.

  3. நீட் தேர்வை நீக்க கோருவது காலனிக்கேற்ப காலை வெட்டிக்கொள்ளக் கூறும் முட்டாள்தனமானது. வெட்கக்கேடானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...