மழை இன்னும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்று செய்தியாளர்களிடம் வானிலை குறித்துக் கூறிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றார். அவர் மேலும் தெரிவித்தவை…
அதிகபட்சமாக வேலூர் 9 செ.மீ, கேளம்பாக்கம், ஜெயம்கொண்டம் 7 செ.மீ, காஞ்சிபுரம், செய்யாறு 6 செ.மீ, சென்னை நுங்கம்பாக்கம், அரியலூர் , மீனம்பாக்கம், திருப்பத்தூர், குமாரபாளையம், கடலூர் 3 செ.மீ.
தெற்கு அரபிக் கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று வலுவாக வீசுகிறது. மத்திய வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியில் தெற்கு ஆந்திரா பகுதியில் நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக வேலூரில் 9 செ.மீ மழையும், கேளம்பாக்கம் , ஜெயம்கொண்டான் ஆகிய பகுதியில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொருத்தவரை வடதமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடதமிழகத்தை பொருத்த வரை ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்..மிதமாக மழையும் ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும்.