தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை மற்றும் கலவரம் வெடித்தது. அப்போது வன்முறையைக் கட்டுப் படுத்த நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த பலரும் தூத்துக்குடி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல தெரிவித்திருந்தனர். ஆனால், முதல்வர் எடப்பாடி இதுவரை அந்தப் பகுதிக்கு வரவில்லை.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் சனிக்கிழமை தூத்துக்குடி வரவுள்ளதாகவும், அப்போது துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவார் என்றும் கூறப்படுகிறது.