தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. அப்போது கலவரத்தையும் வன்முறைகளையும் கட்டுப்படுத்த, போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்த துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டனர். அந்த துணை வட்டாட்சியர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தற்போது அளிக்கப்பட்டுள்ளது.
துணை வட்டாட்சியர் கண்ணன், கயத்தார் துணை வட்டாட்சியராகவும், மற்றொரு தனி துணை வட்டாட்சியரான சேகர், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியராகவும் நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைப்படி, இருவருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.