சென்னை: தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என அண்மைக்காலத்திய இரு வழக்குகளிலும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உறுதியுடன் இருந்துள்ளார். இன்றும் தனது உறுதியை 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கிலும் வெளிப்படுத்தியுள்ளார்.
தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியும், அதிமுக., எம்எல்ஏ.,க்கள் 18 பேர் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்தனர். இதனால், அவர்கள் 18 பேரும் கொறடா உத்தரவை மீறியதாகக் கூறி, அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்த்ரவிட்டார் அவைத்தலைவர் தனபால்.
இந்நிலையில் அவைத்தலைவரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 18 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதே நேரம், திமுக கொறடா சக்கரபாணியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கொறடா உத்தரவை மீறியதாக 18 எம்எல்ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டது போல் கடந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி எடப்பாடி அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, கொறடா உத்தரவுக்கு மாறாக வாக்களிக்காமல் விட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் வந்த போது, ஏப்ரல் 27 அன்று அவர் அளித்த தீர்ப்பில், சபாநாயகரின் முடிவே இறுதியானது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறினார். இதனால், ஓபிஎஸ்., ஆதரவு 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில், அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி ஆனது. மேலும் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற கருத்தும் வெளிப்பட்டது.
எனவே, இன்று தீர்ப்பு வெளியான 18 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கிலும், தலைமை நீதிபதி இவ்வாறுதான் கூறுவார் என்று முன்னரே எதிர்பார்க்கப் பட்டது.
அது போல், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என்று உறுதிபடக் கூறியுள்ளார். ஆனால் மற்றொரு நீதிபதி சுந்தரோ 18 பேரின் தகுதி நீக்கம் செல்லாது என்றார்.
இப்படி இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பை எதிர்நோக்கி, இந்த வழக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. ஒரே கட்சி, ஒரே விதமான வழக்குகள், ஒரே விதமான அணுகுமுறை, ஒரே விதமான தீர்ப்புகள் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் செயல்பாடு உறுதித் தன்மையுடன் பார்க்கப் படுகிறது.
அரசியல௠விளையாடà¯à®Ÿà¯ நீதியà¯à®®à¯ நீதிபதிகளà¯à®®à¯ சà¯à®¤à®¨à¯à®¤à®¿à®°à®®à®¾à®• செயலà¯à®ªà®Ÿà®µà®¿à®²à¯à®²à¯ˆ கà¯à®´à®ªà¯à®ªà®®à¯‡ எனà¯à®ªà®¤à¯ à®®à¯à®¤à®²à¯à®µà®¿ வழகà¯à®•௠நீதி தீரà¯à®ªà¯à®ªà¯ தாமதமà¯à®®à¯ இநà¯à®¤ ௧௮ எமà¯.எலà¯.஠மாறà¯à®ªà®Ÿà¯à®Ÿ தீரà¯à®ªà¯à®ªà¯à®•ளà¯à®®à¯ மானà¯à®µà¯‡à®Ÿà¯à®Ÿà¯ˆ ,கà¯à®Ÿà®¿à®¤à¯à®¤à¯ காரோடà¯à®Ÿà®¿à®¯à®¤à¯,வெடிகà¯à®£à¯à®Ÿà¯ வைதà¯à®¤ சதியாலரà¯à®•ளà¯à®•à¯à®•௠தà¯à®£à¯ˆ போன வழகà¯à®•௠அனைதà¯à®¤à¯à®®à¯ நீதி மெலà¯à®² மெலà¯à®² சாகà¯à®®à¯ பண அதிகாரபலம௠தான௠வெலà¯à®²à¯à®®à¯ சடà¯à®Ÿà®®à¯ இரà¯à®Ÿà¯à®Ÿà®±à¯ˆ எனà¯à®ªà®¤à¯ உறà¯à®¤à®¿à®¯à®¾à®•ிகà¯à®•ொணà¯à®Ÿà®¿à®°à¯à®•à¯à®•ிறதà¯