
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்றபோது நிகழ்ந்த வன்முறைகளின் பின்னணியில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான எஸ்.டி.பி.ஐ., இருந்ததாகக் கருத்துக் கூறிய எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.
எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன், பிரேக்கிங் இந்தியா உள்ளிட்ட நூல்கள், கட்டுரைத் தொகுப்புகள், இணைய தளக் கட்டுரைகள் என எழுதி வருபவர். வலதுசாரி எழுத்தாளராக அறியப் படும் அரவிந்தனுக்கு இன்று கொலைமிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில்…
வெள்ளிக் கிழமை இன்று மாலை 3 மணிக்கு எழுத்தாளர் அரவிந்தன் வீட்டின் லேண்ட்லைன் தொலைபேசி எண்ணுக்கு ஒரு கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாகவும், அதனை அவரது தாயார் எடுத்துப் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ள அரவிந்தன், இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நிகழ்ந்த வன்முறை மற்றும் கலவரத்தின் போது, அதன் பின்னணியில் எஸ்டிபிஐ., அமைப்பின் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தாம் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டதற்காக இந்தக் கொலை மிரட்டல் வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் அரவிந்தன்.
Received today at 3:00 pm a death threat. The call was made to my mother’s landline. Filing a complaint with local police. Probably related to my tweet asking to investigate the role of SDPI to Tuticorin violent provocation.
— Aravindan (@arvindneela) June 15, 2018
இபà¯à®ªà¯‹ கரà¯à®¤à¯à®¤à¯à®°à®¿à®®à¯ˆ பாதிபà¯à®ªà¯ இலà¯à®²à¯ˆà®¯à®¾ ஆஃபீசரà¯!?