சேலம் பசுமைவழிச் சாலை குறித்த வன்முறைப் பேச்சு; மன்சூர் அலிகான் கைது!

சென்னை: சேலம் – சென்னை பசுமை வழிச் சாலைக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக அளிக்கப் பட்ட புகாரில், நடிகர் மன்சூர் அலி கானை, சேலம் மாவட்ட போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

அண்மையில் சேலம் சென்ற நடிகர் மன்சூர் அலி கான்,  சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை அமைந்தால், எட்டு பேரின் கையை வெட்டுவேன் எனப் பேசினார். அவரது பேச்சு, சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வன்முறையைத் தூண்டும் விதமாக நடிகர் மன்சூர் அலி கான் பேசியதாக அவர் மீது சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை சென்னை சூளைமேட்டில் உள்ள மன்சூர் அலி கான் வீட்டுக்குச் சென்ற தீவட்டிபட்டி போலீசார், அவரை கைது செய்து சேலத்துக்கு அழைத்துச் சென்றனர்.

முன்னதாக கடந்த மாதம் அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காணொளி…