பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்வி உதவித்தொகை

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்வி உதவித்தொகை சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையின் சார்பில் வித்யாதன் கல்வி உதவித் தொகை சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்க படுகிறது.

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டு படிக்க உத்வித்தொகை வழங்கப் படுகிறது.

The Union Home Minister, Shri Rajnath Singh lighting the lamp at Sarojini Damodaran Foundation Scholarship Distribution Ceremony, in New Delhi on March 18, 2016.

இந்த உதவித் தொகை பெற மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களே உதவித் தொகை பெற தகுதியுடையவர் ஆவர்.

உதவித் தொகை பெறும் மாணவர்கள் வரும் கல்வி ஆண்டில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அவர்களின் மேற்படிப்புக்கும் உதவத் தயாராக இருக்கிறது வித்யாதன்., 2016 ஆம் ஆண்டு வித்யாதன் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 6800 மாணவர்கள் பயின்று வருகின்றனர்

இதில் தற்போது 81 மாணவர்கள் மருத்துவம்,223 மாணவர்கள் பொறியியல் 48 மாணவர்கள் நர்சிங் 1400 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பயின்று வருகின்றனர், மாணவர்கள் படிக்கும் படிப்பு ,மாநிலம் என அதற்கு தகுந்தவாறு உதவித்தொகை மாறுபடும்

இதில் கல்வி உதவித் தொகை பெற 2018ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் 90 சத விழுக்காடு மதிப்பெண் அல்லது A+ தரம் பெற்றிருக்க வேண்டும்

ஊனமுற்றவர்கள் எனில் 75 சத விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி: தேதி ஜுலை 25,2018

விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு சான்றிதல் (அசல் இல்லையென்றால் தற்காலிக சான்றிதழ்,வருமான சான்றிதழ், புகைப்படம் இது குறித்த விவரங்களுக்கு www.vidyadhan.org என்ற இணையத்தில் பார்க்கலாம்

மேலும் விவரங்களுக்கு திரு.ஜேக்கப் சுகுமார் – 73396 59929 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்!