திமுக., ஆட்சியில் கைவிடப்பட்ட சாக்கடை திட்டங்கள் அதிமுக., ஆட்சியில் நிறைவேற்றம்: வேலுமணி

கடந்த 2011ல் அதிமுக., அரசு பொறுப்பேற்ற பின் 19 பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டன என்று கூறினார்.

சென்னை: திமுக ஆட்சியில் கைவிடப்பட்ட பாதாளசாக்கடை திட்டங்கள் அதிமுக., ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பாதாள சாக்கடைத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியது திமுகவா?அதிமுகவா? என்று ஒரு விவாதம் எழுந்தது. அப்போது திமுக., உறுப்பினர்களின் கேள்விக்குப் பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக., ஆட்சியில் 55 பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு 20 திட்டங்கள் மட்டுமே செயலாக்கத்துக்கு வந்தன. அவற்றில் பல்லாவரம் பாதாள சாக்கடைத் திட்டம் தவிர மற்றவை பாதியில் விட்டுச் செல்லப்பட்டன…

கடந்த 2011ல் அதிமுக., அரசு பொறுப்பேற்ற பின் 19 பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டன என்று கூறினார்.