திராவிடக் கட்சி என்றாலும், தம் பாரம்பரிய ஆன்மிகப் பழக்கங்களை விடாமல் பின்பற்றி வருபவர் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். சபரிமலைக்கு யாத்திரை செல்வதில் ஒளிவுமறைவற்ற தன்மையை வெளிப்படுத்துபவர். அப்போது வெள்ளை வேட்டியைத் தவிர மற்ற வண்ணங்களைக் கட்டிக் கொண்டு செல்வார்.
தற்போது தேனி பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் பன்னீர்செல்வம் காவி வேட்டி அணிந்து கொண்டு, கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இது பலரையும் ஆச்சரியப் படுத்தியது.