11/07/2020 1:05 PM
29 C
Chennai

நெல்லையப்பர் கோயிலில் நாளை ஆனித்தேரோட்டம்: பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்!

சற்றுமுன்...

கொரோனா: சுவாச பாதிப்பு சிகிச்சைக்கு சொரியாசிஸ் மருந்து!

இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை, என கூறினார்

கொரோனா: சென்னையில் மண்டலவாரியாக தொற்று பட்டியல்!

அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மண்டலவாரியாக இங்கே குறிப்பிடுகிறோம்

கொரோனாவை விட கொடிய வைரஸ்: ஆன் தி வே என்கிறது சீனா!

பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதில் கஜகஸ்தான் அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம் என்றார் அவா்.

அழகர்கோயிலில் குவியும் கூட்டம்! கொரோனா அச்சத்தால்… கட்டுப்படுத்த கோரிக்கை!

மதுரை அழகர் கோயிலில் கோட்டைவாசலைத் தாண்டி யாரையும் அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பரிசோதிக்க வந்த மருத்துவக் குழு! இருமியே துரத்திய மக்கள்!

வேகமாக கொரோனா பரவும் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ள பூந்துரா கிராமத்துக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக மருத்துவக் குழுவினர் காரில் சென்றுள்ளனர்.

12768586357r நெல்லையப்பர் கோயிலில் நாளை ஆனித்தேரோட்டம்: பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்!தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற சிவஆலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோயில் ஆனித் தேர் திருவிழா கடந்த 19ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை நடக்கிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளுகின்றனர். காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. இதில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

முதலில் விநாயகர் தேர், 2வது சுப்பிரமணியர் தேர், 3வது சுவாமி தேர், அதன்பிறகு அம்பாள் தேர் இழுக்கப்படுகிறது. இந்த தேர்களுக்கு பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். ஒரேநாளில் தேரை நிலைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை உள்ளூர் விடுமுறை என்பதால் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் அருணாசலம், மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தேரோட்டத்தையொட்டி மாநகர கமிஷனர் மகேந்தர்குமார் ரத்தோட் தலைமையில் 1500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 4 ரதவீதிகளிலும் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad நெல்லையப்பர் கோயிலில் நாளை ஆனித்தேரோட்டம்: பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்!

பின் தொடர்க

17,863FansLike
78FollowersFollow
70FollowersFollow
904FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.