ப.சிதம்பரம் உறவினர் கொலை; ஆம்பூரில் பிடிபட்ட கொலையாளிகள்!

இந்த நிலையில் சிவமூர்த்தி கொலை செய்யப்பட்டுள்ளார். உடல் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் மீட்கப்பட்டது. கொலையாளிகள் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பிடிபட்டுள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியான நளினியின் தங்கை பத்மினி.  பத்மினியின் மகள் துர்கா வைஷ்ணவி திருப்பூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் சிவமூர்த்தி. ஒரு மகன் மகள் உள்ளனர். சிவமூர்த்தி ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையத்தில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜுன் 25ஆம் தேதி வீட்டில் கோவைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற சிவமூர்த்தி அதன் பின் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது தந்தை சின்னசாமி திருப்பூர் வடக்கு போலீஸாரிடம் நேற்று புகார் அளித்தார். அதன்  பேரில், வழக்கு பதிந்து போலீஸார் விசாரித்தனர்.

இந்த நிலையில் சிவமூர்த்தி கொலை செய்யப்பட்டுள்ளார். உடல் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் மீட்கப்பட்டது. கொலையாளிகள் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பிடிபட்டுள்ளனர்.