எடப்பாடியார் அல்ல… கரிகால சோழன்! : அமைச்சரின் பேச்சால் சலசலப்பு!

கரிகால சோழனையும் மருது சகோதரர்களையும் ஒப்பிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னை:  முதலமைச்சர் பழனிசாமி குடிமராமத்து நாயகன், கரிகால சோழன் என்று அமைச்சர் உதயகுமார் வெகுவாகப் புகழ்ந்துள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் உதயகுமார் இது குறித்துக் கூறியபோது,  ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண்ணை அள்ள அரசு அனுமதி அளித்ததன் மூலம் விவசாயிகள் முதல்வர் பழனிசாமியை குடிமராமத்து நாயகனாகவும், கரிகால சோழனாகவும் பார்க்கின்றனர் என்றார்.

தமிழகத்தில் 7.5 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், அம்மா வழியில் மருது சகோதரர்களை போல ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் எங்களை வழிநடத்துகின்றனர் என்று குறிப்பிட்டார் அமைச்சர் உதயகுமார்.

கரிகால சோழனையும் மருது சகோதரர்களையும் ஒப்பிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.