இத்தாலி நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவன் பிரக்ஞானந்தாவை, அழைத்து பாராட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.
கிரிடின் ஓபன் (Gredine Open) செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 12 வயது மாணவன் பிரக்ஞானந்தா, அதிக புள்ளிகள் பெற்று கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். சென்னை திரும்பிய அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்திய பிரக்ஞானந்தாவை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து வாழ்த்திய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். உறவினர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் ஆளுநரை சந்தித்தது மகிழ்ச்சி அளித்ததாக மாணவர் பிரக்ஞானந்தா கூறினார்.