110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார் என பார்த்தால், மினி பட்ஜெட்டையே படிக்கிறார் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் இன்று சட்டப் பேரவையில் கிண்டல் அடித்தார்.
முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரிசையாக சில அறிவிப்புகளைச் செய்தார். அதில் திட்டங்களும் செலவினங்களும் ஒதுக்கீடுகளும் இருந்தன. அவற்றில் குறிப்பிடத் தக்க சில…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.30 கோடியில் தங்கும் விடுதிகள் கட்டப்படும்.
சிறந்த விளையாட்டு வீரர்கள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும்.
மாவட்ட விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்படும்.
ரூ.1 கோடி செலவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை ஏற்படுத்தப் படும்.
உலகத் தமிழ் மாநாடு, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.5 கோடி செலவில் நடத்தப்படும்.
இணைய தளத்தில் தமிழை மேம்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப் படும்.
கோயில் திருப்பணி மற்றும் புனரமைப்புக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப் படும்.
– பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிக்கையில் கூறியவை இவை!