தில்லி துணை நிலை ஆளுநர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தை ஒப்பிட்டு, அண்மைக் காலமாக ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுவதிலும், சட்டப் பேரவையில் இருந்து கல்லூரி மாணவர் போல் வெளிநடப்பு செய்வதிலும் மும்முரமாக இருந்து வரும் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தனது கருத்தை டிவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார்.
அதில், தில்லி ஆளுநர் குறித்த தீர்ப்பை தமிழக ஆளுநர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவரது டிவிட்டர் பதிவில், மாநில அந்தஸ்தே இல்லாத டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் நடக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனை முழுஅதிகாரம் படைத்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும், குறிப்பாக தமிழக ஆளுநர் இதனை நன்கு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்… என்று கூறியுள்ளார்.
ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி வரும் ஸ்டாலினை ஆளுநர் ராஜ்பவனுக்கு அழைத்து தனது தரப்பு விளக்கத்தை அளித்திருக்கிறார். மேலும், தாம் ஆட்சி அதிகாரத்தில் தலையிட வில்லை என்றும், மத்திய அரசின் நலத் திட்டங்கள் எவ்வாறு மக்களை சென்றடைகிறது என்பதை பார்த்தறியவே மாவட்ட வாரியாகச் சென்று பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
மத்திய அரசின் திட்டங்கள் பலவற்றை முறைகேடுகள் செய்து கபளீகரம் செய்யும் திராவிடக் கட்சியினருக்கு ஆளுநர் செயல் அச்சுறுத்துவதாகத்தான் இருக்கும் என்று கருதும் பொதுமக்கள் ஆளுநர் ஆய்வை வரவேற்று கடிதங்கள் அனுப்பி வருகின்றனர். ஆனால், வழக்கம் போல் திசை திருப்பும் செயல்களையே செய்து வரும் திமுக.வினரோ, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பொய்த் தகவல்களையே ஊடகங்கள் மூலம் மீண்டும் மீண்டும் பதியவைத்து வருகின்றனர்.
மாநில அந்தஸ்தே இல்லாத டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் நடக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனை முழுஅதிகாரம் படைத்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும், குறிப்பாக தமிழக ஆளுநர் இதனை நன்கு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்
— M.K.Stalin (@mkstalin) July 4, 2018