கோவையில் இருந்து சேலத்திற்கு புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது நடத்துனர் இல்லாத பேருந்து சேவை என்பது சிறப்பம்சம்.
நெடுந்தொலைவுக்குச் செல்லும் பேருந்துகள், நடத்துனர் இல்லாமல் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சட்டப் பேரவையில் அறிவித்திருந்ததன் அடிப்படையில், கோவையிலிருந்து சேலத்திற்கு நடத்துனர் இல்லாத பேருந்து சேவை இன்று தொடங்கியது.
இந்த வழித்தடத்தில் முதல் கட்டமாக 6 பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்படும். பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு நடத்துனர் டிக்கெட் கட்டணத்தை வசூலிப்பார். அதன் பின்னர் புறப்பட்டுச் செல்லும் இந்தப் பேருந்துகள் வழியில் எங்கும் நிற்காது என்பது குறிப்பிடத் தக்கது.