பயிற்சியின்போது உயிரிழந்த கோவை மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி

பேரிடர் காலங்களில் தப்பிப்பது எப்படி என்பது குறித்து தனியார் அமைப்பைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பயிற்சி அளித்த போது கோவை தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவி லோகேஸ்வரி எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார்.

அவரது உயிரிழப்புக்குக் காரணமான பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப் பட்டுள்ளார். இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து காலை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதை அடுத்து, கோவை மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், ரூ. 5 லட்சம் நிதி உதவி அளிக்கப் படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.