கடையநல்லூர் அருகே அரசு பேருந்து- பைக் மோதல்: அண்ணன்-தங்கை பலி! கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த பரிதாபம்!

கடையநல்லூர் அருகே மங்களாபுரம் அருகே அரசு பேருந்து பைக் மீது மோதியதில் அண்ணன் தங்கை உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் நாடார் தெருவில் வசிக்கும்  பரமசிவன் மகன் சுந்தரபாலாஜி ( 24) இவரது தங்கை ஹேமலதா(23) இருவரும் ஒருபைக்கிலும் பரமசிவன் (மகளை திருமணம் செய்த) மருமகன் செல்வராஜ் வேறொரு பைக்கிலும் இளத்தூர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு ஸ்கூட்டர் பைக்கில் கடையநல்லூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது பைக்கை சுந்தரபாலாஜி ஓட்டினார் மங்களாபுரம் வலைவு அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி வந்த அரசு பேருந்து பைக் மோதியதில், ஹேமலதா சுந்தரபாலாஜி  ஆகியோர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தனர்.

சுரண்டையை சார்ந்த செல்வராஜ் ஹேமலதா திருமணம் முடிந்து 10நாட்களே ஆகியுள்ளது. இதில் மாமனார் பைக்கில் வந்ததால் செல்வராஜ் தனது கண் முன்னே மனைவி பலியானதை கண்டும் கதறி அழுதார். தனது கண் முன்னே தனது இரண்டு பிள்ளைகளும் பலியாதை கண்டு தந்தையும் கதறினார்.

இது குறித்து தீயணைப்புதுறையும், கடையநல்லூர் போலீசார் உதவி ஆய்வாளர் பரிமள ஆகியோர் சம்பவஇடத்திற்கு வந்து இருவரின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை கைது செய்து, கடையநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

.