சென்னை புழல் சிறையில் இருந்து இயக்குனர் கவுதமன் விடுதலை செய்யப்பட்டார்.
உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து சிறையில் இருந்து கவுதமன் வெளியே வந்தார். ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய கவுதமன் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் போராட்டம் எதுவும் நடத்துவதாக இருந்தால், போலீஸாரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.