தாமிரபரணி அம்மனுக்கு தென்காசியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு!
தாமிரபரணி ஆற்றில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புஷ்கரம் விழா வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த புஷ்கர விழாவுக்காக செய்யப்பட்டுள்ள தாமிரபரணி அம்மன் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து, கடந்த 11 ஆம் தேதி சிருங்கேரி மடத்தில் மகா சுவாமிகள் ஆராதனை செய்து, வழியனுப்பி வைத்தார்.
அகில பாரத துறவியர்கள் சங்கத்தின் செயலர் சுவாமி ராமானந்தா தலைமையிலான தாமிரபரணி புஷ்பகர குழுவினருக்கு தென்காசியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.