காதல் திருமணம் செய்து கொண்ட அடுத்த வாரமே கணவருக்கு அடி உதை கொடுத்தார் அந்த இளம் மனைவி.
பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவைச் சேர்ந்த அந்த இளம் தம்பதி, பெற்றோரை எதிர்த்து கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டுள்ளது. கோயிலுக்கு வந்தபோது, கணவரின் கையில் ஒரு பெண்ணின் பெயர் பச்சை குத்தியிருந்ததைக் கண்டு, அதுபற்றி கேட்டுள்ளார் மனைவி.
கணவனிடம் இருந்து திருப்திகரமான பதில் கிடைக்காததால், கோயிலில் சத்தியம் செய்யுமாறு வலியுறுத்தினார். ஆனால், கணவனோ மறுத்துள்ளார். இதில் ஆவேசமுற்றே அந்த இளம் பெண், காதல் கணவரை செமையாக கவனிக்கத் துவங்கினார். அந்தப் படம்தான் இது…!