காவிரியில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அதில் இருந்து வெளியேற்றப் படும் நீர் காவிரியில் வெள்ளப் பெருக்காக மாறியுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இதனிடையே, திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான முக்கொம்பு அணைப் பகுதி, காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கையை ஒட்டி, தற்காலிகமாக மூடப் பட்டுள்ளது. இது குறித்து வைக்கப் பட்டுள்ள அறிவிப்பில், பாதுகாப்பு கருதி முக்கொம்பு சுற்றுலா தலம் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடப் படுகிறது என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.