தமிழக முன்னாள் முதல்வரும் திமுக., தலைவருமான கருணாநிதி உடல் நலம் குன்றி நேற்று நள்ளிரவு காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில் அவரைப் பார்ப்பதற்காக இன்று காலை மருத்துவமனைக்கு வந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
இதை அடுத்து கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை ஸ்டாலின், கனிமொழி, செல்வி, துரைமுருகன், வேலு ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர்.
10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவமனைக்கு வந்தார். கருணாநிதி உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.