திருநெல்வேலி: பூட்டிய கோவில்களில் சிலைகள் திருடு போய்க்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோவிலில் தாங்களாகவே சிலையைத் திருட்டு கொடுக்க, திருடிக் கொண்டு போ எனச் சொல்லாமல் சொல்லி கிரிட்கேட்-டை திறந்துவைத்திருக்கிறது அறநிலையத் துறை!
பிரசித்தி பெற்ற நெல்லையப்பா் சுவாமி கருவறைக்கு அருகில் உள்ள நெல்லை கோவிந்தா் கருவறையில் தடுப்பு பித்தளை கிாில் கேட் போடப்பட்டுள்ளது. அந்த கிாில் கேட் பழுதடைந்துள்ளது. கருவறைக்கு அருகில் செல்லக்கூடிய கிாில் கேட் முற்றிலும் வெல்டிங் விடப்பட்டு கேட் தனியாக உடைந்து தொங்குகிறது.
இதனைப் பராமாிக்க கோவில் நிா்வாகம் தயங்கிய நிலையில் கிாில் கேட் கயிறு கட்டிய நிலையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் நெல்லை கோவிந்தா் உற்சவா் சிலை பஞ்ச லோகத்தால் ஆன சிலை திருட்டு போகும் நிலையில் பாதுகாப்பின்றி உள்ளது.
கோவில் சிசிடிவி கேமராக்கள் சாியான நிலையில் இயங்குகிறதா, இல்லையா? நெல்லையப்பருக்கே வெளிச்சம்..! கோவில் நிா்வாகமும் இந்து சமய அறநிலையத் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?
– சொ.பொன்னம்பலவாணன் (நெல்லை மாநகர மாவட்டம், இந்து முன்னணி)