December 6, 2024, 10:07 PM
27.6 C
Chennai

9.50க்கு வெளியானது மருத்துவ அறிக்கை! அன்று அப்பல்லோ… இன்று காவேரி!

சென்னை: உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து இரவு 9.50 க்கு மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டது காவேரி மருத்துவமனை நிர்வாகம்.

அந்த அறிக்கையில், கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப் பட்டதன் காரணமாக முன்னேற்றம் அடைந்துள்ளது. சிறப்பு மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறார்கள். அவரது உடல் நிலை சீராகி வருகிறது. கருணாநிதி சீரான நிலைக்கு விரைவில் வந்துவிடுவார் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

இதை அடுத்து, காவேரி மருத்துவமனைக்கு வெளியில் திரண்டிருந்த திமுக., தொண்டர்கள் உற்சாகம் அடைந்து எழுந்து வா தலைவா என கோஷம் இட்டபடி இருந்தனர்.

இதனிடையே இன்று இரவு 1 மணி அளவி