துபையிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் செல்போனில் மறைத்து கொண்டு வரப்பட்ட ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர்.
துபையிலிருந்து மதுரை வந்த விமானத்தில் தங்கம் கடத்துப் படுவதாக வந்த தகவலை அடுத்து மத்திய சுங்க இலாகா நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பயணிகளிடம் எதுவும் சிக்காத நிலையில் விமானத்தின் உள்ளே சோதனை செய்த போது நடுப் பகுதியில் கருப்பு டேப் சுற்றிய பார்சலைப் பிரித்தனர். அப்போது அதில் 4 செல்போன் இருந்துள்ளது. அதன் உள்ளே 1 கிலோ 329 கிராம் தங்கம் கைப்பற்ற பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 40 லட்சத்து 33 ஆயிரம் ஆகும்.. இது குறித்து சுங்க இலாகாவினர் விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.