சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
காவேரி மருத்துவமனையில் நான்காவது நாளாக தீவிர சிகிச்சையில் உள்ள கருணாநிதியை பல்வேறு தலைவர்களும் வந்து பார்த்து, நலம் விசாரித்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அவரை சந்தித்து உடல்நலம் விசாரிக்க இன்று சென்னைக்கு வந்திருந்தார்.
மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்தும் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் அவர் கேட்டறிந்தார். கருணாநிதி அருகில் குனிந்து கொண்டு ஸ்டாலின் ஏதோ சொல்வதும், அதைக் கண்டு சிரித்தபடியே ராகுல் போஸ்கொடுப்பதுமான புகைப்படம் வெளியானது.
கருணாநிதியைப் பார்த்துவிட்டு வந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “கருணாநிதி தைரியமானவர் நலமாக இருக்கிறார். அவர் நலமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என சந்தோஷம் பொங்கக் கூறினார்.
ராகுல் காவேரி மருத்துவமனைக்கு வந்து விசாரித்த வீடியோ…