சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதி உடலுக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை இயற்கை எய்திய திமுக., தலைவர் மு.கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், விஐபிக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், திமுக., செயல் தலைவர் ஸ்டாலின், குடும்பத்தினர், தொண்டர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.