சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்துக்கு வந்த அவரை, ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். விமான நிலையத்தில் இருந்து ராஜாஜி ஹால் செல்லும் மோடி, கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.