சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து இன்று காலை தன் மகன்களுடன் கருணாநிதி சமாதிக்கு பால் தெளிக்கச் சென்றார். கையில் ஒரு பிளாஸ்டிக் புட்டியை வைத்து, அதில் பால் எடுத்து, கையில் ஊற்றி, கருணாநிதி சமாதியில் சிமிண்ட் பலகையில் ஊற்றிவிட்டு வந்தார்.
இந்தப் புகைப்படம் இன்று பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது குறித்து பலத்த விவாதங்கள் அவற்றில் எழுந்து வருகின்றன. காரணம், பால் ஊற்றுதல் பகுத்தறிவில் சேருமா என்பதுதான்!
ஒரு மனிதரின் மரணம் எத்தனை நாத்திகவாதிகளை தோலுரித்துக் காட்டுகிறது; மரணம் சோகமானது மட்டுமல்ல பல சமயங்களில் பகுத்தறிவுவாதிகளின் போலித் தனத்தையும் அல்லவா வெளிச்சம் போட்டு காட்டுகிறது – என்று கருத்து தெரிவிக்கிறார்கள் பலர்.
தமிழ்ப் பால் ஊட்டிய தலைமகற்கு இந்தக் கவிப் பால் ஊற்றியது ஆவின் பால்.. – என்று பாலூற்றும் வைபவத்துக்கு கவிதை எழுதிச் செல்கிறார்கள் சிலர்.
கற்சிலைக்கு பால் எதற்கு என்று கேட்ட பகுத்தறிவே…
சிமெண்ட் சிலாப்பிற்கு பிளாஸ்ட்டிக் கேனில் பால் எதற்கு?
கேட்கிறீர்களா?
ஆம் நான் பால் ஊற்றினேன்
அது கலைஞருக்காக இல்லை
அந்தத் தமிழ்ப் பாலில் இந்த ஆவின் பால் தூய்மையாகட்டும் என்று…
சடங்கு செய்தேன்….
அது கலைஞருக்காக அல்ல
சடங்கு செய்வோரும் வர வேண்டும் என்பதற்காக!
இந்த சமூக அக்கறை தவறென்றால் நான் குற்றவாளியே
– என்று கலைஞரின் பராசக்தி வசனத்தை டப் செய்து கவிஞரின் குரலாகப் பதிவு செய்திருக்கிறார்கள்…
இது போதாதென்று டிவிட்டரில் #பாலூற்றியபகுத்தறிவுதிமுக என்ற ஹேஷ் டேக்கில் #பாலூற்றியபகுத்தறிவுதிமுக வைரமுத்து படம் பரவலாகிறது.
சிலைக்கு பால் எதற்கு என்றவர்கள்…
சிமிண்ட் சிலாப்பிற்கு பால் ஊற்றுகிறார்கள்..
அடடே! – என்று கவிதை மழை பொழிகிறார்கள்.
கற்சிலைக்கு பால் எதற்கு என்று கேட்ட பகுத்தறிவே !
சிமெண்ட் சிலாப்பிற்கு பிளாஸ்ட்டிக் கேணில் பால் எதற்கு? pic.twitter.com/qbXJDx2LF0
— வணங்காமுடி? (@itz_katti) August 9, 2018
கறà¯à®šà®¿à®²à¯ˆà®µà®Ÿà®¿à®µà®¾à®¯à¯ தெயà¯à®µà®¤à¯à®¤à¯ˆ வழிபடà¯à®¤à®²à¯‹, பால௠அபிஷேகம௠செயà¯à®¤à®¤à¯ எதறà¯à®•à¯ எனà¯à®±à¯ கேடà¯à®Ÿ இநà¯à®¤ இநà¯à®¤ போலி பகà¯à®¤à¯à®¤à®±à®¿à®µà¯à®³à¯à®³ மனிதனà¯, இனà¯à®±à¯ சமாதியிலà¯à®³à¯à®³ சிமெணà¯à®Ÿà¯ தளதà¯à®¤à¯à®•à¯à®•à¯ பால௠ஊறà¯à®±à¯à®•à®¿à®±à®¾à®©à¯. வெடà¯à®•à®•à¯‡à®Ÿà®²à¯à®²à®µà®¾ ? கரà¯à®£à®¾à®¨à®¿à®¤à®¿à®¯à®¿à®©à¯ மரணம௠அதà¯à®¤à®©à¯ˆ நாதà¯à®¤à®¿à®•à®µà®¾à®¤à®¿à®•à®³à¯ˆà®¯à¯à®®à¯, பகà¯à®¤à¯à®¤à®±à®¿à®µà®¾à®¤à®¿à®•à®³à¯ˆà®¯à¯à®®à¯, போலி வேஷதாரிகளையà¯à®®à®²à¯à®²à®µà®¾ தோலà¯à®°à®¿à®¤à¯à®¤à¯à®•à¯à®•à®¾à®Ÿà¯à®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
Every soul is potentially divine and hence no one can be truly an athiest.