சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
செவ்வாய்க்கிழமை காலமான திமுக., தலைவர் கருணாநிதியின் பூதவுடல், புதன்கிழமை மெரினா கடற்கரையில், அண்ணா நினைவிடத்தின் அருகில் சந்தனப் பேழையில் வைத்து புதைக்கப் பட்டது.
இந்நிலையில் இன்று காலை கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்ற திமுக., செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், ஆ.ராசா, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.