தென்காசி: ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்காக பலரும் குற்றாலத்தில் குவிந்தனர்.
முன்னதாக நள்ளிரவில் அருவிக் கரைக்கு வந்து குளித்து அங்கே தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்கிச் சென்றனர். இதனால் குற்றாலம் பகுதியில் கூட்டம் அதிகம் இருந்தது. நேற்று மதியத்துக்குப் பின்னர் மழை இல்லாததால் அருவியில் தண்ணீர் வரத்து மிதமாக இருந்தது. எனவே பயணிகள் குளிப்பதற்கு போலீஸார் அனுமதி அளித்திருந்தனர்.