குற்றாலம்: கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைக்கக் கூடாது என்று இஸ்லாமியர்களிடம் எஸ்பி சொல்வாரா என்று பார்க்கிறேன் என ஹெச்.ராஜா கூறினார்.
குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறியபோது…
நெல்லையில் சாமக்கொடை திருவிழா பிரபலமாக நடக்கும். ஆனால் காவல்துறை அதற்கு அனாவசிய கெடுபிடிகள் விதிக்கிறது என்ற குற்றசாட்டு உள்ளது. இதற்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம் அறிவித்திருந்தனர். நேற்று நெல்லை மாவட்ட எஸ்பியிடம் இது குறித்து விளக்கம் கேட்டோம். அதற்கு அவர், தாங்கள் எந்த கட்டுப்பாடுகளும் செய்யவில்லை. ஆனால் இரவு பத்து மணிக்கு மேல் மைக் வைக்கக் கூடாது; உள்ளுக்குள் பாக்ஸ் வைக்கலாம். ஆனால் அங்கிருந்து வெளியில் சத்தம் வரக்கூடாது என்று சொல்லியிருந்தார்.
மேலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கி குறித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. எனவே அதை பத்து மணிக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லியிருந்தார்.
ஒலிபேருக்கி விவகாரத்தில் நீதிமன்றத்தைச் சொல்லி இப்படி கூறுவதை நான் வரவேற்கிறேன். ஆனால் இதே கட்டுப்பாடுகளை மசூதிகள் விஷயத்திலும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் செயல் படுத்துவாரா என்று பார்க்கிறேன்
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் அனுமதி பெற்று சாமக்கொடை நடத்தப்ப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் அனுமதி கேட்டு நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு, பாதுகாப்புக்கு என்று ரூ. 25 ஆயிரம் கட்டுங்கள் என்று வற்புறுத்துவதாக குற்றம்சாட்டுகிறார்கள்.
ஆனால், இவ்வாறு போலீஸ் பாதுகாப்புக்கு பணம் கேட்பது சரியில்லை என்று கூறினோம். இது, காவல்துறையே லஞ்சம் கேட்பது போல் தெரிகிறது. எனவே காவல் துறை இவ்வாறு எந்த விதமான வகையிலும் இந்துக்களிடம் கேட்கக் கூடாது. அது சட்டத்தை மீறிய செயல். ஆகவே எஸ்.பி. இதை உறுதிப் படுத்த வேண்டும் என்று சொன்னோம்.
ஹிந்துக்கள் மிகவும் அமைதியானவர்கள்,. நீங்கள் சொல்வதைக் கேட்பவர்கள். அதனால்தான், விநாயகர் சதுர்த்தி தொடங்கும் நேரத்தில் இவ்வளவு கெடுபிடிகள் ஆரம்பித்திருக்கிறீர்கள். இவற்றை மற்ற மதத்தினரிடம் கேட்பதில்லை. அவர்கள் உத்தரவிடுவார்கள். காவல்துறை அதைக் கேட்கும். எனவே இந்துக்களுக்கு எதிராக இவ்வாறு சொல்வதை ஏற்க இயலாது.
சோஷியல் மீடியா கூட்டத்தில் பேசியபோது, சமூக வலைத்தளங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. காரணம் தெரிந்தோ தெரியாமலோ, ஊடகங்களில் பொய்கள் பரப்பப் படுகிறது. மோடிவேடட் டிஸ்கஷன் நடக்கிறது. ஆகவே அவற்றை எதிர்கொள்வதற்கு ஏதோ மோடிக்கு எதிராக எல்லா கட்சிகளும் சேர்ந்து கொள்கிறது என்று சொல்கிறார்கள். சேரட்டும் இதை விவாதம் செய்கிறார்கள். என்னப் பொறுத்தவரை
பள்ளிச் சிறுவர்கள் மாதிரியான மனப் போக்கு அவர்களிடம் உள்ளது. ஸ்டாலினால் மம்தாவுக்கு என்ன பலன், மம்தாவால் ஸ்டாலினுக்கு, சந்திரசேகர ராவ்க்கு, மாயாவதிக்கு என்று எல்லோருக்கும் என்ன பலன்.
இவர்கள் எல்லோராலும் ஸ்டாலினுக்கு என்ன பலன் என்று விவாதம் செய்கிறார்கள். எல்லோரும் சேரட்டுமே … ஏதோ மோடிக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்தது போலான ஒரு திட்டமிட்ட செயலாகவே இதை நான் கருதுகிறேன்.
அதனால் இன்று சமூக ஊடகங்களின் மூலமாக, பல உண்மைகளை, மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான அவசியம் இருக்கிறது.
தமிழகத்தில் தீய சக்திகள், நக்சல்கள், பிரிவினை வாதிகள், தேசவிரோதிகளை கைது செய்தால், அதை ஒரு விவாதம் ஆக்குவது. ஆனால், அவர்களைக் கைது செய்வது சரியானது என்று சொல்வதற்கு ஒரு அவசியம் உள்ளது. எனவே சமூக வலைத்தளங்களின் மூலம் உண்மைகளை எடுத்துச் சொல்வதற்கு நியாயங்களை எடுத்துச் சொல்வதற்கும், தவறான பிரசாரத்தை முறியடிப்பதற்கும் பயன்படுத்த இந்தக் கூட்டம் நடத்தப் பட்டது.