காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்.
இப்படி ஒரு டிவிட்டர் பதிவை இப்போது டிரெண்டாக்கியுள்ளார் தயா அழகிரி! #ஓசிச்சோறுவீரமணி #ஓசிசோறுவீரமணி
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு கருணாநிதி ஆக.7 அன்று காலமானார். அவருக்குப் பின் திமுகவை வழி நடத்துவது யார் என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியிலும் மற்ற கட்சித் தலைவர்கள் மத்தியிலும் ஏற்பட்டது.
இதை அடுத்து ஊடகங்களிலும் திமுக.,வுக்கு தலைமை ஏற்க பொருத்தமானவர் யார் என்ற கேள்வி எழுந்தது. அழகிரியா? ஸ்டாலினா? என்று ஒவ்வொருவரும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க, அழகிரியை கட்சிக்குள்ளேயே சேர்க்கக் கூடாது என்று குரல் எழுப்பி வருகின்றார்கள் திமுக.,வில்! #ஓசிசோறுவீரமணி
இந்நிலையில், நேற்று சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப் பட்டுள்ள கருணாநிதியின் சமாதிக்கு வந்த முக அழகிரி, செய்தியாளர்களைச் சந்தித்த போது, உண்மையான கலைஞரின் விசுவாசிகள் என்னோடு இருக்கிறார்கள் என்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அழகிரியின் பேச்சு, திமுகவில் நடக்கும் தர்மயுத்தம் என்று கூறப்பட்டது. இது குறித்து கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, வீட்டில் இருப்பவர்களைப் பற்றி கேளுங்கள் வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்களைப் பற்றி கேட்க வேண்டாம் என்று பதில் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கருணாநிதியின் பேரனும், அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி காலம் காலமாக திமுகவிலும் அதிமுகவிலும் ஓசிச் சோறு உண்ணும் கி வீரமணி அவர்கள் இதைப் பற்றி பேசவேண்டிய அவசியமில்லை என்று பதில் பதிவிட்டுள்ளார்.
திக., வீரமணிக்கு #ஓசிச்சோறுவீரமணி #ஓசிசோறுவீரமணி என்ற பட்டத்தைக் கொடுத்துள்ள தயா அழகிரிக்கு பாராட்டும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. டிவிட்டரில் வார்த்தைப் போர் நீண்டு வருகிறது.
திமுக., வில் இல்லாத ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஒருவரும், திக.,வுக்கு மட்டும் என்ன தொடர்பு உள்ளது என்று ஒருவருமாக பதிலடிகள் பரிமாறப் படுகின்றன.
காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்.
— Dhaya Alagiri (@dhayaalagiri) August 14, 2018
ஓசிசà¯à®šà¯‹à®±à¯à®µà¯€à®°à®®à®£à®¿ எனà¯à®± பொரà¯à®¤à¯à®¤à®®à®¾à®© படà¯à®Ÿà®¤à¯à®¤à¯ˆ திரà¯à®Ÿà¯à®Ÿà¯ வீரமணிகà¯à®•௠கொடà¯à®¤à¯à®¤ ஸà¯à®°à¯€ தயா அழகிரிகà¯à®•௠ஒர௠சபாஷ௠போடலாமà¯.