திருச்சி: திருச்சியில் ஸ்ரீரங்கத்தை அடுத்து சமயபுரத்தை இணைக்கும் கொள்ளிடம் இரும்புப் பாலம், ஆற்றில் பெருகிய வெள்ள நீரில் சேதம் அடைந்துள்ளது.
கொள்ளிடம் இரும்புப் பாலம் மிகப் பழைமையானது. இந்தப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப் பட்டு, அருகில் புதிய நேப்பியல் பாலம் வடிவிலான இரு வழிப் பாலம் கட்டப் பட்டது. இந்தப் பாலத்தில் தான் இப்போது போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இருப்பினும், கொள்ளிட வெள்ளத்தில் இந்தப் பாலத்தில் அடிச் சுவர் சேதம் அடைந்து, பாலம் சேதம் அடைந்துள்ளது. எனவே இந்தப் பாலத்தில் எவரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது.
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு 1,95,000 கன அடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. கபினியில் இருந்து 70,000 கன அடியும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1,25,000 கன அடியும் வெளியேற்றப்படுகிறது.
இரு அணைகளில் இருந்தும் மொத்தமாக 1,95,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.